திருப்பூர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தற்கொலை!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை.
திருப்பூர் மாநகராட்சி 36-ஆவது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மணி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. தேர்தல் செலவுக்காக ரூ.50 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில், 44 ஓட்டுகள் மட்டும் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெறவில்லை என்பது கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. ஆனாலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் களம் இறங்கினர்.
இதுவும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு இடத்தில கூட வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் களத்தில் நின்று வேட்பாளர்களுக்கு வேதனை அளித்தது. இந்த வேதனையில் வேட்பாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.