திருப்பூர் மாநகராட்சி உதவிப் பொறியாளர் திருநாவுக்கரசு கொரோனாவால் உயிரிழப்பு..!

Default Image

திருப்பூர் மாநகராட்சி உதவிப் பொறியாளர் திருநாவுக்கரசு என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

திருப்பூரில்,கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும்,நேற்று ஒரே நாளில் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால்,திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,931 ஆக உயர்ந்துள்ளது.மேலும்,நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில்,திருப்பூர் மாநகராட்சி உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு என்பவர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல்,சளி போன்ற காரணங்களால் திருப்பூர் அருகில்,வீரபாண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, பரிசோதனை செய்ததில் திருநாவுக்கரசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இதனைத் தொடர்ந்து,தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் நேற்று நள்ளிரவு திருநாவுக்கரசு உயிரிழந்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த உதவிப் பொறியாளர் திருநாவுக்கரசுவின் மறைவிற்கு திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்