பறக்கும் கேமிராவை பார்த்து பதறி ஓடும் இளைஞர்கள்.! வீடியோ உள்ளே.!
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுவருகிறது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைத்து மக்கள் வெளியில் நடமாட தடைவிதித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகர காவல்துறையினர் ட்ரான் கேமிரா மூலம் பொதுமக்கள் வெளியில் நடமாடினார்களா என பார்த்து வந்துள்ளனர். அப்போது, பொட்டல் காட்டில் இளைஞர்கள் கேரம் விளையாடி வந்துள்ளனர். அப்போது, ட்ரோன் கேமிராவை பார்த்ததும், இளைஞராகள் பதறி அடித்து ஓடுகின்றனர். அதில் கேரம் போர்டை தூக்கி கொண்டு ஒரு இளைஞர் ஓடுகிறார். அவரை ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணிக்கவே, அவர் அந்த கேரம்போர்டை தூக்கி வீசிவிட்டு ஓடுகிறார்.
இந்த விடியோவை திருப்பூர் போலீசார் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு வெளியில் தேவையில்லாமல் சுற்றக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விடியோவை வெளியிட்டதாக குறிப்பிட்டனர்.
##TNPOLICEFORU
##tiruppurCityPolice
##followதிருப்பூர்மாநகரகாவல்
##coronaawarness pic.twitter.com/LkOuDRUPyT— Tiruppur City Police (@ThirupurP) April 15, 2020