திருப்பூரில் இரோடு இரவாக மதுக்கடைகளுக்கு வெல்டிங் வைப்பு !
திருப்பூர் காங்கேயத்தில் மதுக்கடைகளை மூடி வெல்டிங் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது. மதுபானங்களை வாங்க வருபவர்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற கட்டுபாடுகளை உயர்நீதிமன்றம் விதித்தது.
மக்கள் நீதி மையம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க நேற்று பிறப்பித்த உத்தரவு முழுமையாக பின்பற்றவில்லை என்றும் தனிநபர் இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதை நிருபிக்கும் விதமாக புகைப்பட ஆதாரங்களை எடுத்துக் காட்டியுள்ளனர். இதனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மதுக்கடைகளை இனிமேல் திறக்க கூடாது என்றனர்.
இதனால், தமிழகத்தில் இருக்கும் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில், திருப்பூரில் காங்கேயத்தில் நேற்று இரவோடு இரவாக மதுக்கடைகளை பூட்டி வெல்டிங் வைத்துள்ளனர். இதுத்தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.