அரிவாளால் கணவரின் அண்ணனை வெட்டிக் கொன்ற பெண்..!

நிலத்தகராறில் கணவரின் அண்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் ஆனது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்த கம்ம கிருஷ்ணபள்ளியில் நடந்துள்ளது.இந்த ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது அண்ணன் முருகேசன் இருவருக்கு இடையே நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே முன் விரோதம் ஆனது இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இருதரப்புக்கும் இடையே கடுமையாக தகராறு ஏற்பட்டுள்து.அப்போது வெங்கடேசனின் மனைவி சித்ரா ஆத்திரத்தில் முருகேசன் மற்றும் அவரது மனைவி விஜயாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார்.வெட்டுக்காயம் பட்ட முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவருடைய விஜயா படுகாயங்கமடைந்த நிலையில் அவரை வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றிய சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.