நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உறவினர்களுக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனம் – திருப்பத்தூர் ஆட்சியர் பாராட்டு!

Default Image

கொரோனா நோயாளிகளுடன் தங்கியிருக்கக் கூடிய உறவினர்களுக்கு காலை மதியம் ஆகிய 2 நேரங்களில் இலவசமாக உணவு வழங்க கூடிய திருப்பத்தூரை சேர்ந்த பசுமை தாய்நாடு அறக்கட்டளை தொண்டு நிறுவனத்திற்கு அம்மாவட்டத்தின் ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனை சார்பில் சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நோயாளிகளுடன் தங்கியிருக்கக் கூடிய அவர்களது குடும்பத்தினர் அல்லது உறவினர்களுக்கு உரிய நேரத்தில் உணவு கிடைப்பதில்லை சில நேரங்களில் அவர்கள் வெளியில் சென்று உணவு வாங்க வேண்டி இருக்கிறது அல்லது பலர் சாப்பிடாமலேயே இருந்து விடுகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கேள்விப்பட்ட திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள எரிகோடி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 50 பேர் சேர்ந்து “பசுமை தாய்நாடு அறக்கட்டளை” என்ற தொண்டு நிறுவனம் சார்பில் நோயாளிகளுடன் தங்கியிருக்கக் கூடிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு காலை மதியம் ஆகிய இரண்டு வேளை இலவசமாக உணவு வழங்க முன்வந்துள்ளனர்.

தற்பொழுது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய 350 நோயாளிகளின் உறவினர்களுக்கும் காலை, மதியம் ஆகி இரண்டு நேரங்களிலும் பசுமை தாய்நாடு அறக்கட்டளை தொண்டு நிறுவனம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறதாம். மேலும் முழு ஊரடங்கு காரணமாக சாலையோரங்களில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்கள் 100 பேருக்கும் தினமும் மதிய உணவையும் இந்த நிறுவனம் சார்பில் வழங்கி வருகின்றனராம். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அவர்கள் இளைஞர்களின் மனிதாபிமான செயலை கண்டு தற்பொழுது பாராட்டு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்