திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த லட்டு தயாரிப்பில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்துவதாக முன்னாள் முதலைவரான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி இருக்கிறார்.
திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் உலகம் முழுவதும் உள்ள பகதர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதியில் வழங்கப்படும் பிரசாத லட்டில் மாட்டு கொழுப்பு போன்றவற்றை கலப்பதாக எழுந்துள்ள இந்த சர்ச்சை தேசிய அளவில் பெரும் பரபரப்பை பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஆந்திர முதல்வரான சந்திர பாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டார் எனவும் புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி மாசுபடுத்தி இருக்கிறார் எனவும் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது கூறினார்.
இது மேலும் திருப்பதி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தமிழ் பட இயக்குநரான மோகன்ஜி அவரது எக்ஸ் தளத்தில் காட்டமாக பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், “எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்குறீர்கள். வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள். கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்.” என்று பதிவிட்டிருந்தார்.
#TirupatiLaddu எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள். pic.twitter.com/tTmKzSppHk
— Mohan G Kshatriyan (@mohandreamer) September 19, 2024