Tirupathur Accident: சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி.! பிரதமர் மோடி அறிவிப்பு.!

PMModi

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஓனங்குட்டை பகுதியில் இருந்து சுமார் 15க்கும் மேற்பட்டோர் வேனில் சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது வேன் சண்டியூர் அருகே பஞ்சராகி நின்றுள்ளது. உடனே சாலையில் நிறுத்தி ஓட்டுநர் பஞ்சர் பார்த்துள்ளார்.

வேனில் பயணித்தவர்கள் வேனுக்கு அருகே அமர்ந்து ஓய்வெடுத்துள்ளனர். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த லாரி ஒன்று வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிரந்தர மோடி ஆறுதல் கூறி நிதியுதவி அறிவித்துள்ளார்.

அதன்படி, “தமிழகத்தின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்