வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.?
இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். – வானிலை ஆய்வு மையம் தகவல்.
வங்கக்கடலில் உருவான காற்றுழத்த தாழ்வு பகுதி நகர்ந்து இலங்கையை கடந்து தற்போது குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது . இது இன்னும் 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்க உள்ளதால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.