14 காமிராவில் ஒரு கேமிரா மட்டும் தான் வேலை செய்ததா?! வீர தம்பதியின் வீட்டில் நடந்த கொள்ளையில் பல மர்மங்கள்!
கடந்த 11 ஆம் தேதி, திருநெல்வேலி கடையத்தில், சண்முகவேல் மற்றும் செந்தாமரை தங்களது பண்ணை வீட்டில் தனியாக இருந்த போது, இரு கொள்ளையர்கள் அவர்களை தாக்க முயற்சித்தனர். அப்போது அந்த வீரத்தம்பதி அந்த திருடர்களை விரட்டி அடித்ததனர்.
இந்த சிசிடிவி காட்சிகள் சமுக வலைத்தளத்தில் பரவி அந்த தம்பதியை பலரும் பாராட்டினார். மேலும், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் கையால் சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் பல முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதலில், அந்த பண்ணை வீட்டில், 14 கேமிராக்கள் இருக்கின்றன. ஆனால் சம்பவத்தன்று குறிப்பிட்ட அந்த ஒரு கேமிரா மட்டுமே வேலை செய்துள்ளதாம் காரணம் இந்த கேமிரா கையாள்வது இந்த தம்பதியின் மகன்களில் ஒருவர்தனம். அதுவும் ஆன்லைனில் வேறு இடத்தில் இருந்து இந்த கேமிராவை இயக்கி உள்ளார். அப்போது தேதி நேரத்தை மற்ற முற்பட்டுள்ளார். இதன் காரணமாகத்தான் மற்ற கேமிராக்கள் சம்பவத்தன்று வேலை செய்யவில்லையாம்
இந்த சம்பவம், கொள்ளையடிக்கவோ, அல்லது, கொலை செய்யவோ நடக்கவில்லை, மாறாக சொத்து தகறாரா என தனிப்படை விசாரித்து வருகிறதாம். காரணம், அவர்கள் வளர்ந்திருந்த நாய் கொள்ளையர்கள் வந்தபோது குறைக்கவில்லை என்பது போலீசாரை மிகுந்த சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சந்தேகங்களின் பெயரில் இதுவரை 50க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடைபெற்று உள்ளது. இன்னும் இவர்களது மகன்களை வரவழைத்து அவர்களிடம் விசாரணை நடத்த தனிப்படை முடிவு செய்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.