அண்மையில் திருநெல்வேலியை பரபரப்பாகிய ஒரு கொலை சம்பவம் அரங்கேறியது. திருநெல்வேலி நாங்குநேரியை சேர்ந்த நம்பிராஜன் அவரது சமூகத்தை சேர்ந்த தங்கபாண்டி மகள் வான்மதியை காதலித்து, பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.
இதன் பின்னர் காதல் திருமண ஜோடி திருநெல்வேலி டவுனில் தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர், வான்மதி சகோதரர் சமாதானம் பேச அழைத்து வர சொன்னதாக முத்துபாண்டியன் என்பவர் நம்பிராஜனை அழைத்து சென்றார்.
இதனை அடுத்து அங்கு முத்துபாண்டியனுடன் நம்பிராஜன் சென்றார். அந்த இடத்தில வான்மதி சகோதரர் செல்லசாமி, செல்லத்துரை, முருகன், ஆகியோர் ஆயுதங்களுடன் இருந்துள்ளனர். இதனை கண்ட நம்பிராஜன் தப்பி ஓட முயற்சித்த போது, நம்பிராஜனை அந்த கும்பல் கொடூரமாக வெட்டிக்கொன்றது. பின்னர் அந்த உடலை ரயில் தண்டவாளத்தில் கொண்டு போட்டுவிட்டனர்.
இந்த கொலை சம்பவத்தை அடுத்து, தப்பியோடிய செல்லசாமி, செல்லத்துரை, முருகன், முத்துபாண்டியன் ஆகியோரை போலீசார் தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்தனர். இவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர்.
அதில் வான்மதி சகோதரர் செல்லசாமி கூறிய அறிக்கையில், ‘ எனது தங்கை வான்மதியை காதலிப்பதாக நம்பிராஜன் சுற்றி வந்தான். அவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கின்றன. இதனை சுட்டிகாட்டடி, எனது தங்கையிடமும் கூறினேன். ஆனால், நம்பிராஜன், ‘நான் உன் தங்கையை தூக்கிகொண்டு தாலி காட்டுவேன்’ என சவால் விடுத்தான். அப்படி செய்தால் உன் தலையை வெட்டிவிடுவேன் என நான் கூறினேன். சொன்னபடி என் தங்கையை திருமணம் செய்துகொண்டான்.அதனால் நான் கொலை செய்துவிட்டேன்.’ என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…