திருக்கோவில் குடமுழுக்கு தொடர்பாக உரிய ஆவணங்கள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட பட்டியலைச் சேர்ந்த திருக்கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு நடத்திட ஆணையர் நிலையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருக்குடமுழுக்கு அனுமதி வேண்டி மண்டல இணை ஆணையர்களால் அனுப்பப்படும் முன்மொழிவில் முழுமையான ஆவணங்கள் இணைத்து அனுப்பப்படாததால் திருக்குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்ட்டுள்ளது.
எனவே இதனை தவிர்க்கும் வகையில், இனி வரும் காலங்களில் திருக்குடமுழுக்கு அனுமதி வேண்டி வரப்பெறும் அறிக்கைகளில் இத்துடன் இணைத்தனுப்பப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியலை பூர்த்தி செய்து இணை ஆணையரால் சான்றொப்பம் இடப்பட்டு சரிபார்ப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இனங்களுக்கு உரிய ஆவண நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும் என அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…