திருச்செந்தூர் சீலால் சிக்கலில் சிக்கும் பக்தர்கள்……..!!!தவிக்க விடும் அரசு…!!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சேதமடைந்த நிலையில் உள்ள 308 விடுதி அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவில் முருகன் அரசுரனோடு போர் புரிந்து வென்ற இடமாகும்.இங்கு இம்மாதம் நடக்கும் சூரசம்காரம் வெகுசிறப்பாக நடைபெறும்.இந்நிலையில் தான் இந்த கோவிலில் கடந்த ஆண்டு கிரி பிரகார மண்டபம் இடிந்து விழுந்தது.
இந்தவிபத்தில் ஒரு பெண் கோவிலிலேஉயிரிழந்தார். இதையடுத்து கோவில் கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.அவ்வாறு அமைக்கப்பட்டஇந்த 6 பேர் கொண்ட குழு கோவிலில் உள்ள வேலவன் விடுதி, செந்தில்ஆண்டவர் விடுதி, ஜெயந்திநாதர் விடுதி, சிறு குடில் விடுதிகளில் 401 அறைகளில் ஆய்வு அதிரடியாக செய்தது.
அப்படி ஆய்வு செய்ததில் 308 அறைகள் தங்க தகுதியற்றவையாகஇருந்துள்ளது.எனவே இந்த 308 அறைகளுக்கு சீல் வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாத்தில் விரைவில் கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா நடைபெறவுள்ள நிலையில் தனியார் விடுதிகளில் பக்தர்கள் அதிக கட்டணம் கொடுத்து தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU