திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது..!
திருச்செந்தூரில் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அருகே கடல் 25 அடி தூரம் உள்வாங்கியது.
திருச்செந்தூரில் வழக்கமாக சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அருகே அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் நவமி திதி நாட்களில் காலையில் கடல் நீர் உள்வாங்குவதும் மாலையில் பழைய நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நவமி திதி தினமான நேற்று காலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அருகே கடல் நீர் சுமார் 25 அடி உள்வாங்கியது. இதனால் கடற்கரை ஓரத்தில் இருக்கும் பாசி படிந்த பாறைகள் வெளியே காணப்பட்டது. பக்தர்கள் வழக்கம் போல் கடலில் நீராடினர். அதிலும் சிலர் பாறைகளுக்கு இடையில் இருக்கும் சங்கு, சிப்பி போன்ற பொருள்களை எடுத்துச்சென்றனர்.