திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா.! பக்தர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.!
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை முடிந்ததும் அடுத்ததாக இந்து கடவுள் முருகனுக்கு உகந்த திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெறும். இதற்காக சிறப்பு பூஜைகளுடன் வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கும்.
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவுக்கு தமிழகமெங்கும் இருந்து பக்தர்கள் வருவார்கள். இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘ கோவில் வளாகம் சுற்றி பகதர்கள் நலனுக்காக, மொத்தம் 66 இடங்களில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது. 19 இடங்களில் நடமாமடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.’ என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டு பேசினார் அமைச்சர் சேகர்பாபு.