பள்ளத்தில் சிக்கி வெடித்த டயர்.! தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்.! நெஞ்சை பதறவைத்த அதிர்ச்சி சம்பவம்..!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கோவையில் மாணவர்கள் மூவரும் ஆற்றுப் பாலத்தில் இருந்து போத்தனூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளனர்.
  • திடீரென பைக் டயர் வெடித்து, பள்ளத்தில் விழுந்து பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொத்தனூர் அருகே சாய் நகரை சேர்ந்தவர் 17 வயதான ஆஷிக் பாட்ஷா. இவரது நண்பர்கள் முகமது நசீர், முகமது அஸ்கர் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளனர். இந்த நிலையில் இரவு 12 மணியளவில் மாணவர்கள் மூவரும் ஆற்றுப் பாலத்தில் இருந்து போத்தனூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளனர். அதில், ஆஷிக் பாட்ஷா பைக்கை ஓட்டி செல்ல மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்துள்ளனர்.

பின்னர் போத்தனூர் ரோடு சாய் நகர் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவே இருந்த பள்ளத்தில் பைக்கை விட்டதும் பைக் டயர் வெடித்துள்ளது. விழுந்த வேகத்தில் மூன்று பேரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த முகமது நசீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய மற்ற இருவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதில் ஆஷிக் பாட்ஷா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். முகமது அஸ்கருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மியான்மர் நிலநடுக்கம் : 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா!

நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…

3 minutes ago

இது எங்க CSK டீம் இல்ல.., பீல்டிங் சொதப்பல்! குமுறும் ரசிகர்கள்… கேப்டன் ருதுராஜ் கூறியதென்ன?

சென்னை : ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தனி ஆளாக மிக பெரிய அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்கள்…

1 hour ago

“ஒரு ரவுடிய அடிச்சா தான், அவன் பெரிய ரவுடி..” விஜய் குறித்து அண்ணாமலை கிண்டல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்த்தில்…

2 hours ago

17 வருட பகையை தீர்த்து கொண்ட ஆர்சிபி… சேப்பாக்கத்தில் சிஎஸ்கே படுதோல்வி.!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…

10 hours ago

மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு.!

பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…

10 hours ago

CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!

சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…

12 hours ago