அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் – தலைமைச் செயலாளர் உத்தரவு
தகுதியான ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவு.
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தகுதியுள்ள அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும். ஓய்வுபெறும் நாளென்று செயற்கை பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் பதவி உயர்வு பெற்று முழு சேவை செய்யாமலேயே பண பலன்களை சிலர் பெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, செயற்கை காலிப்பணியிடங்களை ஏற்படுத்துவது, தற்காலிக பதவி உயர்வு வழங்குதலை உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெறும் நாளென்று செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு ஏற்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழகுங்க – தலைமைச் செயலாளர் உத்தரவு#tngovt pic.twitter.com/YvyddNo6If
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) August 5, 2022