விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம்

ஜூலை 1 முதல் மதுரை கோட்டத்திற்குட்பட்ட விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், மதுரை – சென்னை எழும்பூர் பாண்டியன் விரைவு ரயில் இரவு 8.40 மணிக்கு பதில் 8.45க்கு புறப்படும், மறுமார்க்கத்தில் அதிகாலை 5.45க்கு பதில் 5.30க்கு மதுரை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் மதுரையிலிருந்து மதியம் 03.15 மணிக்கு பதில் 03.20க்கு புறப்படும், மறுமார்க்கத்தில் நண்பகல் 12.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.50 மணிக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் – கன்னியாகுமரி விரைவு ரயில், ராமேஸ்வரத்திலிருந்து இரவு 08.50 மணிக்கு பதிலாக 08.55க்கு புறப்படும். திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி விரைவு ரயில் இரவு 10.30 மணிக்கு பதிலாக 10.45க்கு புறப்படும்.
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் திருநெல்வேலிக்கு காலை 07.05 மணிக்கு பதிலாக 06.45 மணிக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் கொல்லத்திலிருந்து முற்பகல் 11.45 மணிக்கு பதிலாக 11.55க்கு புறப்படும்.
செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை விரைவு ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 06.15 மணிக்கு பதிலாக மாலை 06.10க்கு புறப்படும். திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் திருச்செந்தூரிலிருந்து முற்பகல் 11.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024