வேலூரில் மாவட்ட ஆட்சியரால் மாற்றப்பட்ட பால் விற்பனை செய்யும் நேரம்!
உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து கடைகள் ஆலயங்கள், கல்விக்கூடம் என எல்லாமே மூடப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால், அத்தியாவசிய பொருட்களான பால் விற்பனை செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 6 மணி முதல் 8 மணி வரை காலையிலும், 5 மணி முதல் 7 மணி வரை மாலையிலும் ஏற்கனவே பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும் என ஆவின் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் நாளை முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என வேலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.