இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், மத்திய மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. அதன்படி வரைஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மக்கள் யாரும் வேலைக்கு செல்ல இயலாததால் வீட்டிலேயே முடக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசு பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு பயிர்க்கடன், சொத்துவரி போன்றவை செலுத்துவது தொடர்பாக பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தங்களது மதத் தவனையை செலுத்த 3 மாத கால அவகாசம் நீடிக்கப்படுகிறது என அறிவித்துள்ளது. அதேபோல் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.200 கோடி கடனுதவி மற்றும் தங்கள் மாத தவணையை செலுத்த 3 மாத கால அவகாசம் என பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் வாகன ஓட்டுநர் உரிமங்கள், தகுதி சான்றுகளை (FC) புதுப்பிக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…