வட்டியில்லாமல் சொத்து வரி செலுத்த ஜன.15 வரை அவகாசம்!
சென்னை மாநகராட்சியில் வட்டியில்லாமல் சொத்து வரி செலுத்த ஜன.15 வரை அவகாசம் நீடிக்க தீர்மானம்.
சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசத்தை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீடிக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதுபோன்று, பணிகள் துறைக்கு, நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றவும், கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் புதிய நாய் இனக் கட்டுப்பாடு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.