வழிபாட்டு தளங்களுக்கு நேரக்கட்டுப்பாடு தளர்வு -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நேர கட்டுப்பாடுகளை தளர்த்தி பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தற்போது அமலில் உள்ள பொது ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளுடன் அடுத்த மாதம் 31-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நேர கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழக்கமான நேர கட்டுப்பாடு பின்பற்றி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்க்கப்படுவதாக அறிவித்துள்ளார்.