நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஞாயிற்றுகிழமை ( மார்ச் 29) முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் Swiggy, Zomato, Uber Eats போன்ற உணவு விநியோக செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செயல்பட அனுமதி என்றும் மருந்தகங்கள், உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதையடுத்து விளைபொருட்களை 180 நாட்கள் அரசு சேமிப்புக் கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம் எனவும் சேமிப்புக் கிடங்கிற்கான வாடகைக் கட்டணத்தை 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என குறிப்பிட்டார். விரைவில் அழுகக் கூடிய பொருட்களை குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகளில் சேமிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…