அத்தியாவசிய கடைகளின் நேரம் நீட்டிப்பு -தமிழக அரசு அறிவிப்பு
அத்தியாவசிய கடைகளின் நேரத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு . பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழகத்தில் உள்ள பிற பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு . பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.