நேரத்துக்கேற்ப மின் கட்டணம் வீடுகளுக்கு பொருந்தாது – TANGEDCO அறிவிப்பு
நேரத்துக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வீடுகளுக்கு பொருந்தாது என்று என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மின் பயன்பாடு அதிகம் உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 20% கூடுதல் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 2024 ஏப்ரல் முதல் தொழிற்சாலைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் இந்த மின் கட்டண முறை அமல்ப்படுத்தப்பட இருக்கிறது.
அதன்படி, நேரத்துக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வீடுகளுக்கு பொருந்தாது என்றும், எனவே வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. தண்டத் தொகை எதுவும் நிர்ணயிக்கப்படாததால், நுகர்வோர் பாதிக்கப்படமாட்டார்கள் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.