ஆணும் பெண்ணும் சமம் என்பதை இன்று வரை நாம் சொல்லித்தருவது கிடையாது – கனிமொழி எம்.பி
ஒரு பெண்ணை சாமமாக மதிக்க வேண்டும் என்பதை நாம் வீட்டில் சொல்லி கொடுப்பதில்லை என கனிமொழி எம்.பி பேச்சு.
இன்று கோவையில், தேசிய சைபர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் (NCSRC) மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கத்தைத் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், ஆணும் பெண்ணும் சமம் என்பதை இன்று வரை நாம் சொல்லித்தருவது கிடையாது. ஒரு பெண்ணை சாமமாக மதிக்க வேண்டும் என்பதை நாம் வீட்டில் சொல்லி கொடுப்பதில்லை. ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும், எந்த உடை அணிய வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்டவற்றை தானே முடிவெடுத்து நடந்து கொள்ளும் உரிமை ஒரு பெண்ணுக்கு உள்ளது.
டெக்னாலஜி வளர்ந்துள்ள இந்த காலகட்டத்திலும் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் காணப்படத்தான் செய்கிறது. மாறிவரும் தொழில்நுட்ப யுகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சைபர் குற்றங்கள் பற்றி வெகுமக்களிடம் புரிதல் ஏற்படுவதற்கும் இதுபோன்ற கருத்தரங்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என தெரிவித்துள்ளார்.