கதறும் அமைச்சர் : குட்கா ‘இறுக்கும் CBI’ சிவக்குமாருக்கு 3 நாள் சிபிஐ காவலில் விசாரணை..!!
தமிழகத்தில் குட்கா ஊழல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மிகவும் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படும் இந்த வழக்கில், தற்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சிவக்குமாரை அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில் இன்று முன்னாள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிவகுமாரை 3 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.இன்று முதல் வருகின்ற திங்கள் கிழமை 10 மணி வரை விசாரணை நடத்த சிபிஐ க்கு அனுமதி அளித்துள்ளது.
DINASUVADU