பண்டிகை தினத்தையொட்டி 6 சிறப்பு ரயில்கள்..டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.!

Default Image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் 26 மற்றும் நவம்பர் 2,9,16,20,23 ஆகிய நாட்களில் காந்திதாமில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியில் அடுத்த 3 தினங்களில் வந்தடையும். அதனையடுத்து நவ.5, 12, 19, 26 மற்றும் டிச.3 ஆகிய தினங்களில் திருநெல்வேலியில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த 3 தினங்களில் காந்திதாமை காலை 7.45 மணிக்கு வந்தடையும்.

மேலும், வரும் 24-ம் தேதி முதல் ஜபால்பூர் – கோயம்புத்தூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களும், வரும் 24-ம் தேதி முதல் ஹவுரா – யஸ்வந்த்பூர் இடையே தினசரி சிறப்பு ரயில்களும்,வரும் 28-ம்தேதி முதல் யஸ்வந்த்பூர் – ஹவுரா இடையே வாராந்திர ஏசி சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன.

இதே போன்று, வரும் 24-ம் தேதி முதல் தர்பாங்கா – மைசூர் இடையே சென்னை சென்ட்ரல் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்களும்,வரும் 23-ம் தேதி முதல் பாடலிபுத்ரா – யஸ்வந்த்பூர் இடையே சென்னை சென்ட்ரல் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update