ஜனவரி 9 ஆம் தேதி சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும்…! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
ஜனவரி 9 ஆம் தேதி சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் முடிந்து சென்னை திரும்பவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்துள்ளோம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,263 அரசு சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளது . ஜனவரி 9 -ஆம் தேதி சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும். ஜனவரி 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.ஜனவரி 9 ஆம் தேதி சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும். இந்த ஆண்டு 6 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகர பயணிகளின் வசதிக்காக எம்டிசிக்கு புதிய சிவப்பு நிற பேருந்துகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.பொங்கல் அன்று சென்னையில் புதிய சிவப்பு நிற பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு திட்டம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.