இனி வியாழக்கிழமை டெங்கு ஒழிப்பு தினம் -சுகாதாரத்துறை..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாகபரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகள் செய்து எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைக்கும் பொது மக்கள் செல்கின்றனர். தினமும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. வீடுகள் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இப்பகுதியில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற அறிவுரை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.
மேலும் வெள்ளிக்கிழமை தோறும் ஆய்வு நடத்தப்படும் கொசு உற்பத்தி ஆகும் வகையில் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என சுகாதார துறை எச்சரித்துள்ளது.