துரைசாமிக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை – கே.பி.முனுசாமி

Published by
Venu

துரைசாமிக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அண்மையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் .பின்னர் வி.பி.துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார்.

இதனிடையே நேற்று காலை  கமலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனவும் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என கூறினார்.

மத்தியில் ஆட்சி இருப்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார். அதிமுக VS திமுக என்று இருந்த நிலையில் தற்போது பாஜக VS திமுக என மாறிவிட்டது என்று வி.பி.துரைசாமி கூறினார்.இவரது கருத்து  அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை, ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி.முனுசாமி,சட்ட அமைச்சர் அமைச்சர் சி.வி. சண்முகம் , வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

இதன் பின்னர் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி என்று யார் சொன்னது,அந்த கட்சியின் மாநில தலைவரா ?அல்லது அந்த கட்சியின் தேசிய தலைவரா என்று கேள்வி எழுப்பினார்.நேற்று வரை ஒரு கட்சியில் இருந்தவர்,அதற்கு முன்பாக இன்னொரு கட்சியில் இருந்தவர்.ஏதோ கட்சிக்கு சென்றதும் அரசியல் ஆதாயம் தேட இவ்வாறு சொல்லி இருக்கிறார் .வி.பி.துரைசாமிக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை .அவருக்கு பாஜக அந்த அதிகாரத்தை கொடுத்துள்ளதா என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

21 minutes ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

2 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

2 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

2 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

3 hours ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

4 hours ago