துரைமுருகன் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும்- AITUC..!
போக்குவரத்து கழக நடத்துனர்கள் பற்றி பேசியதை அமைச்சர் துரைமுருகன் திரும்பப்பெற வேண்டும்.
தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2-கட்டமாக நடைபெற்றள்ளது. இதனால், அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பேசியபோது, அரசு டவுன் பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் பெண்களை, கண்டக்டர்கள் தரக்குறைவாகப் பேசினால் அவர்களைத் தாக்குங்கள் என பேசினார் என கூறப்படுகிறது.
இதையெடுத்து, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் அரசு போக்குவரத்து கழக நடத்துனர்கள் பற்றி பேசியதை அமைச்சர் துரைமுருகன் திரும்பப்பெற வேண்டும். பெண் பயணிகளிடம் பேருந்து ஊழியர்கள் தரக்குறைவாக நடந்து கொள்வதாக கூறுவதை உறுதியாக மறுக்கிறோம். மக்கள் நலன் கருதி பணிபுரிந்த ஊழியர்கள் அமைச்சரின் பேச்சால் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.