4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.!
4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் தேனி திண்டுக்கல் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.வட மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ள நிலையில் நாளை மறுநாள் வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.