தமிழகத்தில் 10 மாவட்டங்களில்….. இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் இன்று வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .
நாமக்கல், தேனி, கோவை, நீலகிரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அரபிக்கடல் மத்திய பகுதிக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்