3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை..!
அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 11:00 மணி முதல் அடுத்த 6 மணி நேரத்திற்கு தமிழகக் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். குமரி பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.