ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
- நேற்று டெல்டா மாவட்டத்தில் மிதமான மழை பதிவாகி உள்ளது.
- ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி கோவை மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,நேற்று டெல்டா மாவட்டத்தில் மிதமான மழை பதிவாகி உள்ளது. வருகின்ற 22,23 ஆகிய தேதிகளில் நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் பாண்டவையாறு மற்றும் நீடாமங்கலத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.திருவாரூர் மாவட்டம் கொட வாசல், திருவாரூர் நகர் பகுதிகள், திருத்துறைப்பூண்டி, கடலூர், தஞ்சை கும்பக்கோனம், நீலகிரி குன்னூர், திருச்சி புள்ளம்பாடி, திருச்சி நகர் பகுதிகள், தஞ்சை அனைக்கட்டு, வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.