வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அடுத்த 24 மணி நேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இடைவெளி விட்டு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.