ஜில் நியூஸ்: தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகம், புதுச்சேரியில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு எனவும் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளுக்கும் மழைக்கு வாய்ப்பு.
மேலும் சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.