உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி – விஜயகாந்த்

Default Image

மழை நீரை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை. 

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல தற்போது பெய்து வரும் மழையால் சென்னை மாநகர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். சென்னை மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், மழை நீரை அகற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. குறிப்பாக முதல்வர் தொகுதியான சென்னை கொளத்தூரில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் விடிய விடிய தூங்காமல் மக்கள் தவித்தனர்.

குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது.

ஒருபுறம் மெட்ரோ பணிகள் மறுபுறம் மழைநீர் வடிகால் பணிகள் என்று ஏற்கனவே சென்னை மாநகரம் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல தற்போது பெய்து வரும் மழையால் சென்னை மாநகர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மழைநீர் வடியாத இடங்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழை நீரை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்