கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்க்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்களில் விடீயோக்களை வெளியிட்டவர், திருத்தணிகாசலம். இதனால் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குனர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 6 ஆம் தேதி அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, இவர் ஜாமீன் மனுக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.
இதுகுறித்து காவல் துறை தரப்பு கூறுகையில், இவர் கொரோனா பதற்ற நிலையை லாபமீட்டும் நோக்குடன் பயன்படுத்தினார். இவரது ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும். மேலும், இவர் பெற்றதாக கூறும் சித்த மருத்துவ கவுன்சிலின் சான்றிதழ் போலியானது என தெரிவித்தனர். பின்னர் இரு தரப்பு வாதமும் கேட்ட நீதிபதிகள், திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினார். இந்த நிலையில், தற்போது போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. தொடர் புகார் எழுந்ததால், சென்னை காவல் ஆணையர் விசுவநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…