ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் பாட்டீல் வீச்சு.! கருக்கா வினோத்திற்கு 3 நாள் போலீஸ் காவல்.!
கடந்த அக்டோபர் 25ஆம் தேதி புதன்கிழமை அன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் கேட் அருகில் பேரிகாட் (தடுப்பு) மீது கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் பாட்டில் வீசினார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சமயம் அருகில் இருந்த சென்னை பெருநகர காவல்துறையினர் கருக்கா வினோத்தை உடனடியாக கைது செய்து அவரிடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை பரிமுதல்செய்தனர். கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.
ஆளுநர் பாஜககாரர்.. ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம்.! முதல்வர் பரபரப்பு குற்றசாட்டு.!
அவர் ஆளுநர் மாளிகை நோக்கி பெட்ரோல் பாட்டில் வீசவில்லை. கருக்கா வினோத் தனியாக தான் இந்த சமபவத்தை செய்துள்ளார். கருக்கா வினோத் எங்கும் தப்பியோடவில்லை. கருக்கா வினோத்தை ஆளுநர் மாளிகை ஊழியர்கள் யாரும் பிடிக்கவில்லை. சென்னை பெருநகர் காவலர்கள் தான் பிடித்தார்கள் என சிசிடிவி காட்சிகளை கொண்டு தமிழக காவல்துறையினர் விளக்கம் அளித்து இருந்தனர்.
இந்நிலையில், தான் கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க தமிழக காவல்துறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. பெட்ரோல் பாட்டில் வீச்சு தொடர்பாக மேலும் விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்ற காவலில் இருந்த கருக்கா வினோத்தை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க கோரியது.
இந்த வழக்கு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.