தொண்டை வலியை விட தொண்டே முக்கியம் – முதல்வர் மு.ஸ்டாலின்
மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். உரிமைத்தொகை பெற 11.85 லட்சம் பேர் முறையீடு செய்த நிலையில் 7.35 லட்சம் பேருக்கு இந்த உரிமை தொகையை வழங்கப்படுகிறது.
மேல்முறையீடு செய்ததில் தேர்வானபயனாளிகளுக்கு முதல்வர் காசோலையை வழங்கினார். ஏற்கனவே 1.6 கோடி பேருக்கு வழங்கப்பட்ட நிலையில் பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது 1.13 கோடியாக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் எனக்கு தான் மிகுந்த மகிழ்ச்சி; தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும், உரிமைத்தொகை சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்தது. காய்ச்சல் போனாலும் தொண்டை வலி உள்ளது, இந்த வாரம் முழுவதும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொன்னாலும் உங்களை சந்திக்காமல் என்னால் இருக்க முடியவில்லை, தொண்டை வலி இருந்தாலும் தொண்டில் தொய்வு இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றவர் கைது..!
மேலும், மகளிருக்கு ரூ.1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டம் எந்த சின்ன புகாருக்கும் இடமின்றி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பாரபட்சமின்றி தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. தகுதியானோர் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் முதல் அவர்களுக்கு தொகை வரவு வைக்கப்படும்.
தகுதியுள்ள யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது. மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி வெற்றி பெற்றுள்ளோம் என முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.