கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் (38). சரவணகுமாருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் கொண்டார்.
இந்நிலையில் கல்பனா தாய் வீட்டில்கணவருடன் குடியேறி உள்ளார்.அடிக்கடி சரவணகுமார் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படும்.அப்போது சரவணகுமார் தனது தாயார் நாகேஸ்வரி வீட்டுக்கு வந்துவிடுவார். பின்னர் கணவரை அழைக்க கல்பனா வரும்போது நாகேஸ்வரி உடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டதில் மாமியாரை கல்பனா தாக்கியுள்ளார். இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் நாகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கை வாபஸ் பெறக்கோரி கல்பனா அடிக்கடி நாகேஸ்வரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நாகேஸ்வரி சாலையில் நின்று கொண்டிருந்தபோது கல்பனா அவருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
பின்னர் தலையைப் பிடித்து தலையில் கடித்துள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த நாகேஸ்வரி மருத்துவமனைக்கு சென்று ஆறு தையல் போட்டு உள்ளனர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் கல்பனாவை கைது செய்துள்ளனர்.
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…