கோவை மாவட்டம் சூலூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் வகுப்பறையில் சேட்டை செய்ததாகவும், பள்ளிக்கு செல்போனை எடுத்து வந்து, பாடத்தைக் கவனிக்காமல் செல்போனில் கவனம் செலுத்திதாகவும், கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் பலமுறை கண்டித்தும் மாணவர் அடங்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் கூடி மற்ற மாணவர்களை வகுப்பறையில் இருந்து வெளியேற்றி விட்டு கதவை இழுத்து மூடிவிட்டு அந்த மாணவரை பிறப்பு உறுப்பை பிடித்து இழுத்துவிட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வலியால் துடித்த அந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளிக்க மாணவரின் பெற்றோர்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…