சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் – துணை முதல்வர்!
சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 30ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற இந்த உலக சிக்கன தினத்தையொட்டிகூறிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் எனும் முதுமொழிக்கேற்ப தமிழக மக்கள் அனைவரும் தாங்கள் ஈட்டிய பணத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக சிக்கன தினம் குறித்து முதல்வர் அவர்கள், சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கேற்ப மக்கள் தங்கள் பணத்தை அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் சிறுக சிறுக சேமிக்கக்கூடிய தொகை பன்மடங்காகப் பெருக்கி எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பை கொடுப்போம் என கூறியுள்ளார். மேலும் பெற்றோர்கள் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு சிக்கனம் குறித்து சொல்லி தர வேண்டும் என கூறியுள்ளார்.