#Breaking:கனமழை எதிரொலி:தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னைக்கு விரைவு!
சென்னை: மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
சென்னையில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது.சில இடங்களில் 20 செ.மீ-க்கும் அதிகமான மழை பதிவானது.இதனால்,பல இடங்களில் சாலைகளிலும்,வீடுகளிலும் மழைநீர் புகுந்து குளம் போல காட்சி அளிக்கிறது.இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,முதல்வர் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து,மாநகராட்சி சார்பில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட தேவையான அதிக நவீன கருவிகளுடன் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் விரைந்துள்ளனர்.அதன்படி,மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மணலி,தாம்பரம்,பெரும்புலிபாக்கதிற்கு தலா ஒரு குழு என பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள் விரைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் ஏற்கனவே புறப்பட்ட நிலையில் மேலும் 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.