மூன்று மாநில தேர்தல் முடிவுகள் – எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடந்த மாதம் 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன.
இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவை தேர்தலில் மாநில அளவிலான பிரச்சனைகளை முன்வைத்து மக்கள் வாக்களிக்கின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெறும். மூன்று மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்காது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு… அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.!
மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அவர் பேசுகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஏற்கனவே பல சந்திப்புகளை நடாத்தியுள்ளோம். மாநில நலனில் அக்கறை செலுத்தி ஆளுநர் செயல்பட்டால் நன்றாக இருக்கும். தமிழ்நாடு வளர்ச்சிக்கு எதிரான கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதை நிறுத்த வேண்டும். நேரில் சந்தித்த போது, இனிமையாக பேசிய ஆளுநர் தமிழக வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் மழைபாதிப்பை ஒழுங்காக கையாளவில்லை. அதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகத்தான் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக, புயல் சேதத்தை பார்வையிட வந்த ஒன்றிய அரசு குழு பாராட்டியுள்ளது. என்னை சந்தித்த ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டினார் என தெரிவித்து உள்ளார்.