திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில், ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் தமிழக அரசு சார்பில் சிவந்தி ஆதித்தனாருக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பேசிய முதலவர், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில் ரூ.52 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.260 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், பல்வேறு துறைகளுக்கான ரூ.72 கோடி மதிப்பிலான கட்டிடங்களையும் திறந்து வைத்தார். இதையடுத்து தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் நிலைக்கான பணிகள் விரைவில் துவங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி…
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…