பாஜக ஆட்சியில் உயிர் காக்கும் மருந்திற்கு மூன்று விலைகள், இது அநியாயத்துக்கும் அநியாயம் – மு.க.ஸ்டாலின்

Default Image

மக்கள் அனைவரும் தங்கள் உடல்நலத்தை பாதுகாத்து நோய் வராமல் தடுக்க வேண்டிய காலகட்டம் இது என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் அனைவரும் தங்கள் உடல்நலத்தை பாதுகாத்து நோய் வராமல் தடுக்க வேண்டிய காலம் இது. எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு, தங்களையும், தங்கள் உறவினர்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக மக்கள் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார். அவசியம், அத்தியாவசியம் தவிர வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். குறிப்பாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மிக தீவிரமான உடல்நல கோளாறு உள்ளவர்கள் தங்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பின்னர் தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து நிறைந்த இயற்கை பொருட்களை உட்கொள்ளவேண்டும். கொரோனா நமக்கு வராது என்று அலட்சியம் வேண்டாம். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பெரும் நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துள்ளது.

வடமாநிலத்தில் இருந்து வரும் தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்து வருகிறது. கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் தவறிவிட்டது. தற்போது முதல் தவறை விட பெரியதாக இரண்டாவது தவறையும் செய்துவிட்டார்கள் என குற்றசாட்டியுள்ளார்.

முதல் மற்றும் இரண்டாவது பரவல் இடையே மத்திய மாநில அரசுகள் எந்த தற்காப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதன் விளைவுதான் இப்போது நாம் பார்த்து வருகிறோம் என உருக்கமாக கூறியுள்ளார். கொரோனா 2வது அலை மக்களை தாக்கி கொண்டியிருக்கும் நேரத்தில் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டியிருக்கின்றன.

கொரோனா தடுப்பூசிகளின் விலையை உயர்த்தி இருப்பது அநியாயம் என்று தெரிவித்துள்ளார். தடுப்பூசியை வைத்து நடந்த கொள்ளத்தான் இந்த வேதனையான நேரத்தில் மேலும் துயரமான ஒன்று. மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு விலை என்பது அநியாயத்துக்கு அநியாயம் என குற்றசாட்டினார்.

உயிர் அனைவர்க்கும் பொதுவானது தானே, ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே மொழி என்று பேசுற பாஜக ஆட்சியில் உயிர் காக்கும் மருந்திற்கு மூன்று விலைகள் என விமர்சித்தார்.  மத்திய அரசு,மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டும்.

மேலும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று பிரதமர் அறிவித்து, உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்