விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கூர் தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி கடந்த வருடம் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரை கைது செய்யப்பட்டனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கிடைக்காமல் 11 மாதம் சிறையில் இருந்து வந்த நிர்மலா, கடந்த மார்ச் மாதம் ஜாமினில் வெளி வந்தார்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பேராசிரியர் நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்கிலிருந்து விலகினார். இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலாதேவி, மற்றும் முருகன் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராயினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரையும் வரும் 26-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…